இந்தியாவிலும், தமிழகத்திலும் மூத்த அரசியற்தலைவராக இருந்தவரும், சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு, தனது 101வயதில் இன்று 25 திகதி, பிற்பகல் 1.55க்கு உயிர் துறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில், கடந்த 1ந் திகதி முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நல்லக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
நல்லகண்ணுவின் பிரிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
