free website hit counter

Sidebar

04
ஞா, மே
59 New Articles

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 31வது மணிப்பூரி மொழி தின விழா கொண்டாட்டம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
31வது மணிப்பூரி மொழி தினம் மாநில தலைநகர் இம்பாலில் அனுசரிக்கப்பட்டது.
மணிப்பூரி மொழி இந்தியாவின் 8வது அட்டவணையில் ஆகஸ்ட் 20, 1992 இல் சேர்க்கப்பட்டது. 31வது மணிப்பூரி மொழி தினம் மாநில தலைநகர் இம்பாலில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மணிப்பூரி மொழியை இந்தியாவின் 8வது அட்டவணையில் சேர்க்கும் இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு முதல் மந்திரி என்.பிரேன் சிங் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர்.

இதில் பங்கேற்றுப் பேசிய முதல்மந்திரி என்.பிரேன் சிங் கூறுகையில், "பல புத்தகங்கள் நிலத்தின் வரலாற்றைத் திரித்து வருகின்றன. மாநிலத்தில் வெளியிடப்படும் புத்தகங்களை(குறிப்பாக வரலாற்றுடன் தொடர்புடைய புத்தகங்கள்) சரிபார்த்து ஒழுங்குபடுத்த கல்வித்துறையின் கீழ் மாநில அளவிலான குழு அமைக்கப்படும்.

உள்ளூர் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உள்ளூர் மொழி அகராதிகளை உருவாக்கும் திட்டங்கள் கொண்டுவரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), மணிப்பூரி மொழியை பாதிக்கப்படக்கூடிய வகைப்பாட்டின் கீழ் வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula