சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
அமைச்சராக இருந்தபோது, கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.அந்த வகையில் கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு, கரூரிலுள்ள அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி கையொப்பமிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் சோதனையால் தமிழக அரசியலே பரபரப்பாகி உள்ளது. வருமான வரி சோதனையை ஒட்டி முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதையொட்டி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    