முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
 
ஜெயலலிதாவின் அண்ணன் வாறிசுகளான தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை ஆட்சியருக்கு உத்தரவிட்டது. சாவியை மனுதாரரிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
 
ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம் எனவும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறைக்கு அனுமதியளித்துள்ளது. இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.67.9 கோடி அரசுக்கு திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது.
																						
     
     
    