website analysis

கோவை டூ கோவா - மீண்டும் விமான சேவை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பல மாதங்களுக்கு பிறகு கோவைக்கும், கோவாவுக்கும் இடையே வரும் 31 ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கோவையில் இருந்து தற்போது சென்னை, ஐதராபாத், டெல்லி, மும்பை, சார்ஜா உள்ளிட்ட குறிப்பிட்ட பெருநகரங்களுக்கு மட்டும் தற்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உள்நாட்டு விமான பயணிகளுக்கு மற்றொரு சந்தோஷ செய்தியாக, வரும் 31 ஆம் திகதி முதல் கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இண்டிகோ சார்பில் தொடங்கப்பட உள்ளது.

கோவை விமான நிலையத்தில் இருந்து 31 ஆம் திகதி இரவு 10.40 மணிக்கு புறப்படும் இண்டிகோ நிறுவனத்தின் விமானம் நள்ளிரவு 12.05 மணிக்கு கோவா சென்றடையும்.
கோவாவில் இருந்து மீண்டும் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 1.55 மணிக்கு கோவை வந்தடையும்.
இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என்று கோவை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்