free website hit counter

மெட்ரோ ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொடக்கம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம்.
சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்துக்கு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கலாம். மேலும் பயணிகளுக்கு அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2,500-ல் மாத பயணம் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலி மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி இன்று தொடங்கப்பட்டது.

இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.
+91 83000 86000 என்ற எண்ணில் CMRL Live எனும் சாட் வழியே டிக்கெட்டை பதிவு செய்யலாம். செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும் வாட்ஸ்அப் மூலம் செலுத்தி உடனே டிக்கெட்டை பெறலாம். இந்த புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணர்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ புறப்படும் போது, மெட்ரோ நிர்வாகம் கொடுத்த எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேறும் இடத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம். பயணரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் 'கியூஆர்' கோடை பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: