website analysis

முதல்வர் விஜய்யுடன் ஒரேயொரு படம்; பணிப்பெண்ணுக்காக பிரியங்கா வைத்த கோரிக்கை!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தன்னுடைய வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்காக பிரியங்கா காந்தி வைத்த கோரிக்கையை முதல்வர் விஜய் நேற்று (நவ. 16) நிறைவேற்றினார்.

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் கடந்த 10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.

இருப்பினும், இந்தப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எனப் பலரும் பங்கேற்றனர்.

அப்போது, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, கடந்த 22 ஆண்டுகளாக தன்னுடைய இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை முதல்வர் விஜய்யிடம் அறிமுகபப்டுத்தினார்.

பிறகு, அந்தப் பெண்ணுக்கு முதல்வர் விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாக பிரியங்கா தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய் அந்தப் பணிப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, அவருடன் உரையாடினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்