website analysis

தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடைமுறையிலிருக்கும் முழு நேர ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிய வருகிறது.

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து, தற்போது கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முழுநேர ஊரடங்கின் தேவை குறித்தும், தற்போதைய தொற்றின் நிலைமை குறித்தும், மருத்துவ வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் பின்னதாக ஊரடங்கு எத்தரவு நீட்டிப்பு அறிவித்தல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்