மதுரை தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ஆவேசமாக விஜய் பேசினார். விஜய் பேசும் போது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார்.
இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் என்று அறிவித்துவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டார். இதைக்கேட்ட தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஆனால், அடுத்த நொடியே, அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு தனது பெயரை விஜய் கூறியதும் உண்மையாகவே, போட்டியிடும் தொகுதியை விஜய் அறிவித்துவிட்டதாக நினைத்த தொண்டர்களுக்கு, சிறிது நேரம் கழித்துதான் விஜய் பேச்சின் சாராம்சம் புரிந்தது.
மாநாட்டில் விஜய் மேலும் கூறுகையில், நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராகவே வந்துள்ளேன்” என்றார்.