free website hit counter

லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்புடன் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 37 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மனன் வோரா 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு தீபா ஹூடா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹூடா 45 ரன்னில் வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். தனி ஆளாகப் போராடிய ராகுல் 79 ரன்னில் அவுட்டானார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் லக்னோ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

ஆமதாபாத்தில் 27ஆம் திகதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: