website analysis

புதிய தலைவராக ரோகித் சர்மா : பிசிசிஐ அறிவிப்பு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ அதிரடியாக நியமித்துள்ளது. 

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரோடு தான் ஓய்வு பெறுவதாக கோலி அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி இனி இந்திய அணிக்கான டி20-க்கு ரோகித் தான் புதிய கேப்டன் என்பதை பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில், தற்போது இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

மேலும் டெஸ்ட் துணைக் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்