free website hit counter

3 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் டி20 வெற்றி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது இருபதுக்கு -20 போட்டி நேற்று ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைப்பெற்றது.

இதில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, இலங்கை 1-1 என்ற அடிப்படையில் தொடரை சமன் செய்தது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்திய அணி ஆறு மாற்றங்களைச் செய்து, நான்கு புதிய வீரர்களுடன் (நிதிஷ் ராணா, தேவதூத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சகாரியா) களமிறங்கியது. மேலும், இந்த போட்டிக்காக குல்தீப் யாதவ், ராகுல் சாஹர் ஆகியோர் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டனர். குருனல் பாண்டியா கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருடன் இருந்த 8 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதால் இந்தியா இதுபோன்ற பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

மேலும், இலங்கைக்காக ரமேஷ் மெண்டிஸ் சர்வதேச டி20யில் அறிமுகபடுத்தப்பட்டார். ​​சதிரா சமரவிக்ரம மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்தார். அதன்படி, முதல் இருபதுக்கு -20 போட்டியில் விளையாடிய சரித் அசலங்கா (காயம்) மற்றும் ஆஷென் பண்டாரா ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன்களாக இருந்த ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணித்தலைவர் சானகவின் பந்து வீச்சில் ருதுராஜ் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 4 ஓவர்களுக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கு குறைவாகவே வழங்கினர். இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த ஓட்ட வேகம் பெரிதும் சரிந்தது. ஆனால் 11 வது ஓவரில் இருந்து தவான் மற்றும் படிக்கல் ஆகியோர் தங்கள் இன்னிங்ஸை பலப்படுத்த போராடினர். சிறப்பாக விளையாடிய தவான் அகில தனனஜயவின் பந்து வீச்சில் 13ஆவது ஓவரில் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தேவதூத் படிக்கல் (29), சஞ்சு சாம்சன் (13 பந்துகளில் 7) முறையே மூன்றாவது மற்றும் நான்காவது விக்கெட்டுகளுக்கு வணிந்து ஹசரங்க மற்றும் அகில தனஞ்சயா ஆகியோரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அகில தனஞ்சய உள்ளிட்ட இலங்கை பந்து வீச்சாளர்கள் இந்திய இன்னிங்ஸை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினர். கடைசி 4 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களை பெற்றது.

அகில 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், வணிந்து ஹசரங்க, துஷ்மந்தா சமீரா, தசுன் ஷானகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் பகிர்ந்து கொண்டனர். இந்தப் போட்டியில் இலங்கை 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது மற்றும் பந்துவீச்சு திட்டம் வழக்கத்தை விட சற்று வித்தியாசமாக காணப்பட்டது.
இலங்கை டி20 கிரிக்கெட் வரலாற்றில், எட்டு பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டது இது நான்காவது முறையாகும். மேலும் நேற்றைய போட்டியில் இந்திய டி20 வரலாற்றில் அடித்த மிகக் குறைந்த 4 மற்றும் 6 பவுண்டரிகளை பதிவு செய்தது.

133 ஒட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி பவர்பிளே முடிவில் 36 ஒட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்தது. அதன் பின் சராசரி ஓட்டங்களை இலங்கை அணி பெற்று வந்தது. இலங்கை அணியின் ஒட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தனது வழமையான இடத்தை விட்டு முன்னதாகவே களமிறங்கிய அணித்தலைவர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து சென்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மினோட் பானுக 31 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணிக்கு நம்பிக்கையை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தனது 100 ஓட்டங்களை 16.2 ஓவர்களில் பெற்றது. அனுபவ வீரராக விளையாடிய தனஞ்சய டி சில்வா சிறப்பாக அணியை வழிநடத்தினார். 2 ஓவர்கள் மீதமிருந்த போது மழைகாரணமாக நிறுத்தப்பட திட்டமிடப்பட்டபோது இலங்கை அணி 113 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் 116 ஓட்டங்கள் டக் வேர்த் லூவிஸ் இலக்காக காணப்பட்டது. இருப்பினும் மழை உடனே நின்று போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 19 ஆவது ஓவரை அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் வீசப்பட்ட புல் டொஸ் பந்திற்கு கருனாரத்ன சிறப்பானதொரு 6 ஓட்டங்களை பெற்றார். இதன் காரணமாக 20ஆவது ஓவரில் 8 ஓட்டங்களை மட்டுமே இலங்கை பெற வேண்டி இருந்தது. நுணுக்கமாக விளையாடிய தனஞ்சய டி சில்வா இலவகுவாக இலங்கையை வெற்றிக்கு கொண்டு சென்றார். இலங்கை அணி பெரும் இடைவெளிக்கு பின்னர் டி20 வெற்றி ஒன்றை பெற்றது. இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் மினோட் பானுக 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

3ஆவது போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும். முக்கிய வீரர்கள் இன்றி இந்திய அணி தொடரை கைப்பற்றுமா அல்லது தொடர் தோல்விகளை மட்டும் பெற்று வந்த இலங்கை அணி நேற்றைய வெற்றியுடன் தனது புது வெற்றிப்பயணத்தை தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction