free website hit counter

இலங்கையில் 14 நாட்கள் முழுமையான முடக்கம் அவசியம் - உபுல் ரோஹன

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், புதிய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், கொரோனா சிகிச்சை நிலையங்களில் தொற்றாளர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இது மருத்துவ சேவைகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புகுள்ளாவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமெனில், 14 நாட்களுக்காயினும் நாடு டுழுவதிலுமான முடக்கத்தை அறிவித்தால் மட்டுமே தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பயணங்களைக் குறைத்து பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும்,
அதிகமானோர் உயிரிழப்பதற்கு டெல்டா வைரஸே காரணமெனவும், கொரோனா வைரஸால் இறப்பதா அல்லது பட்டனியால் உயிரிழப்பதா எனும் நிலையில், அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விரைவாக தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: