இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வரகிறது. ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்கள் உள்ளிட்ட இந்தப் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என அறிய வருகிறது.
புதிய அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், இதில் பல்வேறு கட்சிகளின் பிரதிகளும் உள்ளடங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உள்ளடங்கலான் அமைச்சரவையாக உருவாகவுள்ள இந்த அமைச்சரவையின் அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    