2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15, 2014 அன்று நடைபெறும்.
அதன்படி, தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 27 முதல் ஜூன் 14, 2024 வரை ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எவ்வாறு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அறிவுறுத்தல் கையேடு வழங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.