முன்னால் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கிலானியின் வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைச்செய்த மலையகத்தின் டயகம பகுதியை சேர்ந்த 16 வயதான ஹிஷாலினின் என்ற சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்தார்.அந்த வழக்கிலேயே ரிஷாட் பதியுதீன் எம்.பி. 5ஆவது சந்தேகநபராக பெயர்குறிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான ரிஷாட் பதியுதீனின் மனைவி, ரிஷாட்டின் மாமனார் மற்றும் தரகர் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.உயிர்த்த ஞாயிரு தாக்குதலின் சந்தேகத்தின் பெயரில் ஏற்கனவே ரிஷாட் சந்தேக நபராக தடுப்புக்காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-வின்சம்-
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    