பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான ஏமாற்றும் கூற்றுகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படாமல் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) வலியுறுத்தியுள்ளது.
பணம் அச்சிடுதல், பண விநியோகம் மற்றும் நாணய மாற்று விகித நிர்ணயம் போன்ற விடயங்களைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் சிறப்புத் தொழில்நுட்ப அறிவும் நிபுணத்துவமும் தேவை என்று மத்திய வங்கி ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சிக்கலான பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த தேவையான தொழில்நுட்பப் புரிதல் இல்லாத தனிநபர்கள் அல்லது தரப்பினரால் செய்யப்படும் தவறான கூற்றுகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
