கொழும்பில் கலவரம் ஏற்பட்ட நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
