free website hit counter

பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை ஹஜ் கடமைக்கு இலங்கையிலிருந்து ஹஜ்ஹாஜிகளை அனுப்பாதிருக்க தீர்மானம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து ஹஜ்ஜாஜிகளை அனுப்பாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஹஜ்ஜாஜிகளை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச்செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதான முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இம்முறை ஹாஜிகளை அழைத்துச் செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த தீர்மானம் இன்று சவுதி அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 1,585 இலங்கையர்களுக்கு ஹஜ் கடமை பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: