free website hit counter

இலங்கையில் மின்சாரக்கட்டணம் 15சத வீதம் அதிகரித்தது !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில்  15 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம்  இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அதிகரிப்பு, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

2025 ம் ஆண்டின் அரையிறுதியில்  திருத்தப்பட்ட கட்டணங்கங்களின் பிரகாரம், சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்களில்  எந்த மாற்றமும் இல்லை.

30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று நள்ளிரவு முதல், ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம்  ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 30 தொடக்கம் 60 வரையிலான பிரிவுக்கு  மாதாந்திர கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.210 ஆகவும், 61 முதல் 90 வரையிலான அலகுகளுக்கு ரூ.240 ஆகவும், அதிகரித்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்திர நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காதெனினும், அலகுகளுக்கான கட்டணம்  அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: