அவசரகால கொள்வனவுகளின் கீழ் வாங்கப்பட்ட மருந்துகள்.
அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் வரியின் கீழ் பெறப்பட்ட 378 வகையான மருந்துகளும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் மருத்துவ கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மருத்துவமனைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.