free website hit counter

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிறுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உறுதியளித்துள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வலிமைமிக்க வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை இதுவரை கோரவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகன் நாமல் ராஜபக்ஷ இன்னும் கால அவகாசம் உள்ளதாகவும், அவர் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

"அவர் இளைஞரா அல்லது நடுத்தர வயதினரா என்பது முக்கியமில்லை, ஆனால் நாங்கள் ஒரு 'வெற்றிபெறும் வேட்பாளரை' [ஜனாதிபதித் தேர்தலுக்கு] பெயரிடுவோம்" என்று அவர் கூறினார்.

“நாமல் ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, முடிவு கட்சியிடம் உள்ளது. அவர் (நாமல்) இன்னும் காத்திருக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: