free website hit counter

மசாலாப் பொருட்களின் இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல வகையான மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் விளையும் மிளகு, ஜாதிக்காய், மசாலா (வசவாசி), மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற சில வாசனைப் பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

மீள் ஏற்றுமதிக்காக இந்த மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், உள்ளூர் மசாலா விவசாயிகள் ஊக்கமிளப்பதாகவும், அதனால் உள்ளூர் மசாலாப் பொருட்களின் சாகுபடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தற்போது உலகின் சிறந்த மசாலாப் பொருட்களில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் மசாலாப் பொருட்களின் தரத்தில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவும், மீள் ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கான மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

உள்ளூர் மசாலாப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கான நீண்ட ஆய்வை மேற்கொள்வது குறித்தும், உள்ளூர் மசாலாப் பொருட்களை தோட்டப் பயிர்களாக மேலும் வளர்ப்பதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: