free website hit counter

இலங்கையில் இயற்கைப் பேரனர்த்த உதவிக்கு வந்த இந்தியா !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில், 'டிட்வா'  சூறாவளி இயற்கைப்பேரனர்த்தம் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறியவருகிறது.

நாடு முழுவதும் பரவியுள்ள வெள்ளத்தினால்,  சுமார் 44,000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும், சுமார் 15,000 வீடுகள் சேதமடைந்து உள்ளதாகவும், ஏறக்குறைய  44,000 பேர் அரசு நடத்தும் தற்காலிக முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும்,  பேரிடர் மேலாண்மை மையம்  இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள்  மூலம் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், DMC இயக்குநர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகோடா, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேஷ் குணசேகர கூறுகையில், “சூறாவளி மெதுவாக நாட்டை விட்டு நகர்ந்து கொண்டிருந்தாலும், அதன் பாதிப்பு  இன்னும் முடிந்துவிடவில்லை.இரண்டு நாட்களுக்குப் பிறகும், பல இடங்களிலும் தண்ணீர் இன்னும் பெருகி வருகிறது,” என்று  கூறினார்.

இதேவேளை சனிக்கிழமை காலை முதல் புயல் மையம் வடமேற்காக கடல் நோக்கி நகர்ந்திருப்பதனால், சூறாவளி அச்சம் நீங்கியுள்ளது. எனினும், இன்னமும் பல இடங்களில் வெள்ளம் குறையாதிருப்பதனால் போக்குவரத்து, மற்றும் மின்சார சேவை, குடிநீர், உணவு என்பவற்றுக்குப் பெரும் சிரமங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இந்திய விமான படையின் மற்றொரு விமானமான IL-76,  மனிதாபிமான  உதவிகள் மற்றும் உணவுப் பொருட்களுடனும்,  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 80 பேர்,  2 நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், மோப்பநாய்  மீட்பு குழு, மற்றும்  2 டன் அவசர மருத்துவ உதவி பொருட்கள் என்பவற்றுடன்  தலைநகர் கொழும்பை இன்று சனிக்கிழமை காலை  வந்தடைந்துள்ளது.

நேற்றைய தினம், முதற்கட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த  இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன. இக்கப்பல்களில் இருந்த இந்திய  விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: