website analysis

விசாரணை முடியும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால செயற்பட தடை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசாரணை முடியும் வரை நிரந்தர தடை உத்தரவு அமலில் இருக்கும்.

சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இரண்டாவது உத்தரவு இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்