website analysis

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி  மீது தாக்குதல் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.இந்தச் சம்பவம் குறித்து  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக  ஐ.தே.கட்சி  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரணில் விக்ரமசிங்காவிற்கு எதிரான வழக்கொள்றிற்காக நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது, அவருக்குப் போதுமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கு வழிவகுத்ததா என, பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் தீவிரமாக உரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தாக்குதல் மூலமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதேனும் ஆபத்தை விளைவிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்