இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (08) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்தியாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான 'ரைசிங் பாரத்' உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
'X' (முன்னர் ட்விட்டர்) இல் பதிவிட்ட ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், நவீன உலகில் இந்தியா அதிக உயரங்களை எட்டியுள்ளது என்று கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ நேற்று (ஏப்ரல் 8) இந்தியாவில் நடந்த 'ரைசிங் பாரத்' உச்சி மாநாட்டில் உரையாற்றினார், பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்களின் புகழ்பெற்ற வரிசையில் இணைந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய உரையும் இடம்பெற்றது.