free website hit counter

நாளை பள்ளிகள் செயல்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாளை (ஜூன் 24) நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று (23) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கல்வித்துறையில் கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை வலியுறுத்தி திங்கட்கிழமை (24) மற்றும் செவ்வாய்க்கிழமை (25) சுகயீன அறிக்கையுடன் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச பாடசாலைகளின் கல்விசாரா ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 50 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், தமது பிரச்சினைகளை குறைந்தபட்ச மட்டத்தில் தீர்த்து வைப்பதற்கு தேவையான எழுத்து மூல உடன்படிக்கைகள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கும் பட்சத்தில் நாளைய தினம் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு (UTUJC) தெரிவித்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: