website analysis

திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல்கள் ஜூன் மாத இறுதிக்குள் ஒழிக்கப்படும் - அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சிண்டிகேட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மோசடிகளை ஒழிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உறுதியளித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அலஸ், விசேட நடவடிக்கையை நிறுத்துமாறு எந்த வெளி அழுத்தங்கள் வந்தாலும், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நிறுத்தப்பட மாட்டாது என வலியுறுத்தினார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்ட பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இலங்கையில் விற்பனை செய்யப்படும் போதைப்பொருள்களின் விலை அதிவேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்ததோடு, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கான துரித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்