இன்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இலங்கையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகள் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை தற்போது வழங்கி வருகின்றார்.
இதேவேளை, இன்றும் நாளையும் நடைபெறவிருந்த ஒப்பந்தங்கள் மீதான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.