free website hit counter

உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதன் விளைவாக இன்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி சாதாரண சோறு மற்றும் கறி பார்சல் ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடையும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘பிரைடு ரைஸ்’ மற்றும் ‘கொட்டு’ ஆகியவற்றின் விலைகளும் 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், ‘பராத்தாஸ்’, ‘முட்டை ரொட்டி’ மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

சாதாரண தேநீர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உணவக உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: