website analysis

செவிலியர்களின் ஓய்வு வயது 61 ஆக உயர்த்தப்படும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வு வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.

ஓய்வுபெறும் வயதை 61 வயதிற்கு மேல் நீடிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார சேவைகளுக்கு புதிதாக 3,000 தாதியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள 1,000 வெற்றிடங்களை நிரப்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்