free website hit counter

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் யானை சின்னத்தில் மாத்திரம் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) எதிர்கால அரசியல் திசைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று (16) காலை அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

‘யானை’ சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும், எதிர்வரும் தேர்தல்களுக்கான கட்சியின் வியூகம் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

கட்சியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், கட்சி முன்னோக்கி செல்லும் போது அதன் திசையை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அபேவர்தன கூறினார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: