இலங்கையின் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் தரமற்ற கையிருப்புகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்படும் அதிக அரசாங்க வரிகள் மற்றும் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நெற்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இரண்டாம் தவணையை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இன்னும் கடினமான பயணத்தை எதிர்நோக்கியுள்ளது என வலியுறுத்தினார்.
ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விலக்கு பட்டியலில் இருந்து பொருட்களை அகற்றுவது குறித்த கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.