மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, "எந்தவொரு அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இந்த வேலைத்திட்டத்தை மீளப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதையில் செல்ல வேண்டும்." என நேற்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வலைவீசுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையானது அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை என பாராட்டியுள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது TRCSL பதிவை உறுதிப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.