free website hit counter

கடலில் நடந்த கொடூரம் IRIS Dena மீதான தாக்குதல் : ஈரானிய வெளியுறவு மந்திரி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி புதன்கிழமை ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்க டார்பிடோவால் மூழ்கடித்ததை "கடலில் நடந்த கொடூரம்" என்று விவரித்திருக்கிறார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 87 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகள் அவர்களைக் கடலில் விட்டுச் சென்றன. ஈரானிய மாலுமிகள் சிலரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 

"இந்திய கடற்படையின் விருந்தினராகச் சென்ற,  டெனா என்ற போர்க்கப்பல் சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது, கடலில் நடந்த கொடூரம் " என்று அப்பாஸ் அராச்சி சமூக ஊடகங்களில் எழுதினார். அவர் மேலும், "எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அமெரிக்கா அது அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்படும்." என்று கூறியுள்ளார்.

இந்தியப்பகுதியில் கடற்படை பயிற்சியில் பங்கேற்ற பிறகு, திரும்பிச் சென்று கொண்டிருந்த IRIS Dene போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் கன்வால் சிபல் கடுமையாக சாடினார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட திரு சிபல், “அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்த பயிற்சியில் ஈரானிய கப்பல்கள் இருப்பதை அமெரிக்கா அறிந்திருந்தது, அமெரிக்க கடற்படை அழைக்கப்பட்டது, ஆனால் கடைசி நிமிடத்தில் அது வாபஸ் பெற்றது. நெறிமுறையின்படி, இந்தப் பயிற்சிகளில் இருக்கும் கப்பல்கள் வெடிமருந்துகளை எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதலால் இது பாதுகாப்பற்றதாக இருந்தது எனக் குறிப்பிட்டதாக பிரித்தானியாவின் morningstar குறிப்பிட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: