ஸ்பெயினில் இன்று காலை இரண்டு அதிவேக ரயில்கள் பயங்கரமாக மோதிக்கொண்டதில், குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டோலிடோ மாகாணத்தில் (காஸ்டிலா- லா மன்சா) நடந்த இந்த கோர விபத்தைத் தொடர்ந்து, 'அடிஃப்' (Adif), மாட்ரிட்-அண்டலூசியா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்த முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பியச் செய்தி நிறுவனத் தகவல்களின்படி, இந்த விபத்து காலை 8:54 மணியளவில் லாஸ் யெபெனெஸ் (Los Yébenes) மற்றும் உர்தா (Urda) ஆகிய நகராட்சிகளுக்கு இடையே, மாட்ரிட்டில் இருந்து செவில் நகருக்குப் புறப்பட்ட அரசின் 'ரென்ஃபே' (Renfe) நிறுவன ரயிலும், தனியார் நிறுவனமான 'இரியோ' (Iryo) நிறுவன ரயிலும் மோதிக்கொண்டன.
ஊடகங்களில் வெளியான ஆரம்பத் தகவல்களின்படி, மாட்ரிட் ரயில் கட்டுப்பாட்டு மையத்தின் ஆரம்பகட்ட ஆய்வில், தண்டவாளப் பாதையில், நின்றுகொண்டிருந்த 'இரியோ' ரயிலின் பின்புறத்தில், 'ரென்ஃபே' ரயில் மோதியதாக தெரியவந்துள்ளது.
'இரியோ' ரயிலில் 146 பயணிகளும், 'ரென்ஃபே' ரயிலில் மொத்தம் 397 பேர் பயணம் செய்ததாகவும் தெரிய வருகிறது. சம்பவ இடத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 30க்கும் அதிகமானவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிய வருகிறது.