free website hit counter

கடகம்: ஏப்பிரல் மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஏப்பிரல் மாத  கடக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:   தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
01-04-2024 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-04-2024 அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-04-2024 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-04-2024 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
ரத்த பாசத்திற்கு அடிமையாகும் கடக ராசியினரே நீங்கள் கொண்ட கடமையில் தவறாதவர், இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.
குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

பூசம்:
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. 

ஆயில்யம்:
இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. 

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான  மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction