website analysis

வார ராசிபலன்கள் - செப்டம்பர் முதல் 28 - ஒக்டோபர் 4 வரை

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான வார ( செப்டம்பர் 28 முதல் - ஒக்டோபர் 4 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.ராகுவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும்.

புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு 

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகள் பெறுவார்கள்.

வழிபாடு: ஐயப்பன் வழிபாடு 

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான அனுமதி பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பண சேர்க்கை உண்டாகும். குடும்ப கவலை மறந்து மன நிம்மதி ஏற்படும்.எதிரிகள் பணிந்து நடப்பார்கள். பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும்.

பெற்றோர் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். மருத்துவ செலவு உண்டாகும். செலவுகள் கைமீறி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்‌ மாணவர்களுக்கு போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு

 கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம் 

புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண பிராப்தி உண்டாகும். ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு மக்கள் பேறு உண்டாகும். தடைபட்ட காரியங்கள் கைகூடிவரும். பந்தயங்களில் அமோக வெற்றி கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் சிறப்பாக நடக்கும்.

பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். உறவினர்களால் பணச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் தொல்லையைக் கொடுக்கும்.வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. 

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு 

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

குடும்ப உறவுகளில் அப்போது சிக்கல்கள் தலை காட்டும். கொடுக்கல் வாங்கல்களில் தகராறுகள் வரலாம். புதியவர்களை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க முடியாது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். சிலருக்கு இந்த தொழில் வேண்டாம் வேற தொழில் செய்யலாம் என்கின்ற எண்ணமும் ஏற்படும்.

மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை.பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இழுபறி நிலை சிலருக்கு ஏற்படும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 28

வழிபாடு: கால பைரவர் வழிபாடு 

ஜோதிடரின் சிறப்பான கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

 ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 29,30

பரிகாரம்: காளியம்மன் வழிபாடு 

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: ஒக்டோபர் 1,2,3

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு 

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

கடன்விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஒக்டோபர் 4 

பரிகாரம்: விநாயகர் வழிபாடு 

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு.

புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன்‌ விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடு 

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணை வியாபார வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். விவசாய தொழிலில் ஆர்வம் காட்டுவீர்கள். தோப்புக் குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும்.

பழைய கடன்களை அடைப்பீர்கள். நில விற்பனை அமோகமாக நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்த நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கு வழியும். அரசாங்க ஆதரவு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பெண்களுக்கு யோகமான வாரம்.வெளிநாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு 

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.

மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தொழில் துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.

மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம். சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிக்கல்கள் வரலாம் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படலாம் என்பதால் வாதப் பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு

- 4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :  +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்