free website hit counter

வலிமை படத்தின் தமிழ் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியால் தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படமே 'வலிமை'.

மறைந்த ஸ்ரீதேவியின் கனவரும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கியது.

ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையிதான் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. பின்னர் படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தனர். ஜூலை 11-ஆம் தேதியான இன்று திடீரென்று 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

தவிர அஜித்துடன் இணைந்து நடித்துள்ள நட்சத்திரங்கள் யார் யார் என்பதையும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலையும் வெளியிட்டதுடன் 'வலிமை' படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். அஜித்துடன் 'வலிமை' படத்தில் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அஜ்யுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்பட பலர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அஜித்தின் பைக் ரேஸிங் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை மோசன் போஸ்டர் சொல்கிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: