free website hit counter

Sidebar

30
தி, ஜூன்
14 New Articles

சிரஞ்சீவியிடம் பாராட்டு பெற்ற சாய் பல்லவி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழில் பாவக் கதைகள் ஆந்தாலஜியில் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருந்தார் ‘ரவுடி பேபி’ நடனப் புயல் சாய் பல்லவி. தற்போது தெலுங்குப்பட உலகில் பிஸியாக நடித்து வரும் அவர்,

நாகசைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் பல்லவி. இப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது. இந்தநிலையில் படம் குறித்து தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினார் சாய்பல்லவி. அப்போது “ தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்குமுன் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த பிடா படத்தில் இருந்து இத்திரைப்படம் முற்றிலும் மாறுபட்டது.

இது சிறந்த காதல் கதைகளில் ஒன்று. அதேநேரம் மனித உணர்வுகள் சம்பந்தமான விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து இப்படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்தப் படத்தில் பாடல் காட்சிகளில் எனது நடனமாட நிறைய வாய்ப்பு அமைந்தது. அதனால் இந்த படத்தில் எனது நடிப்பைப் போலவே நடனத்தையும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியில் பங்குபெற்ற சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி எனது நடத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். நடனமாடுவதில் புயல்போன்றவர் அவர். இது எனக்குக் கிடைத்த முக்கியமான பாராட்டாக நான் எடுத்துகொள்கிறேன்” என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula