free website hit counter

Sidebar

08
வி, மே
62 New Articles

தடுமாறும் விஜய்சேதுபதியை வெப் சீரீஸ் காப்பாற்றுமா?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 10 நாட்களில் விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி என அடுத்தடுத்து படங்கள் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகின.

ஆனால், இந்த மூன்று படங்களிலும் விஜய்சேதுபதி தன்னுடைய முத்திரை நடிப்பை வழங்காமல், மிக விட்டேத்தியாக தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதைப் போல நடித்திருந்தார். அதிலும் துக்ளக் தர்பார் மிக மோசமான கதைத் தேர்வாக அமைந்திருந்தது. இதனால், பத்திரிகையாளர்களும் விமர்சகர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், இப்படியேபோனால், விஜய்சேதுபதி எனும் கலைஞனை நாங்கள் இழந்துவிடுவோம் என வருத்தத்துடன் பேசிக்கொண்டனர். விஜய்சேதுபதியின் இந்தச் சிக்கலுக்கு அவர் தாறுமாறாக பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுப்பதுடன், நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் எனும் தேர்வில் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில்தான் சர்ச்சையை உருவாக்கிய ‘பேமிலி மேன் 2’ வெப் சீரீஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் ஹிந்தி வெப் சீரீஸில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தும் வருகிறார் விஜய்சேதுபதி. இந்த வெப் சீரீஸில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக தமிழ்ப் படங்களில் நடித்துவரும் வட இந்திய நடிகையான நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘துக்ளக் தர்பார்’படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர். இத்தொடருக்கு விஜய்சேதுபதிதான் பரிந்துரைத்தார் என பேசப்பட்டு வருகிறது.

அதேநேரம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலை, தனது தயாரிப்பில் உருவானது. ‘முகிழ்’ என்ற தலைப்பில் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரபல ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ரெஜினா கசாண்ட்ராவை பரிந்துரை செய்ததும் விஜய்சேதுபதிதான் எனப் பேசப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதி நடிக்கும் இந்த வெப் சீரீஸ் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட இருப்பதால், இதிலாவது விஜய் சேதுபதி தனது முத்திரை நடிப்பை வழங்கி, தனது போதாத காலத்திலிருந்து மீண்டு வருவாரா என ரசிகர்களும் திரையுலகினரும் எதிர்பார்க்கின்றனர்.
 
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula