‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜூன் 5 வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், இயக்குனர் மணி ரத்னத்திற்கும் தனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை எனவும், நாங்கள் மிகப் பெரிய கனவுகளைக் காண்கிறோம், ஆனால் நமது சந்தைக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்றும் தெரிவித்தார்.
சிம்புவின் தந்தைக்கு தன் மீது அளவு கடந்த பாசம் என குறிப்பிட்ட அவர், எனக்கு ஒன்று என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது என் சட்டையை நனைத்து விடுவார் என குறிப்பிட்டார். மேலும் போட்டியும் பொறாமையும் நிறைந்த திரைத்துறையில் சிம்பு போல் நட்பு கிடைப்பது கஷ்டம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.