திருப்பதி ஏழுமலையான் நாமத்தை கேலி செய்வது போன்று, சந்தானம் நடிப்பில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்திலுள்ள பாடலினை நீக்க வேண்டும் என ஜனசேனா கட்சி கடுமையான எதிர்ப்புத் தெரதிவித்து, வழக்குத் தொடுத்திருந்த நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய அப்பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் உலகமெங்கும் நாளை வெளியாகவுள்ள நிலையில், இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, புதிய தணிக்கைச் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடி நெக்ஸ்ட் லெவல் அறிவித்தபடி நாளை வெளியாகும் அப் படத்தில் குறிப்பிட்ட பாடல் இடம்பெறாது என படக்குழு உறுதியளித்துள்ள நிலையில், எதிர்ப்புத் தெரிவித்த ஜனசேனா கட்சி, திருப்பதி ஏழுமலையானின் நாமத்தை கிண்டல் மற்றும் கேலியாக பாடல்கள் மற்றும் படங்களில் பயன்படுத்தக் கூடாது என கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறது.