free website hit counter

சிவகார்த்திகேயனின் ‘மதராசி’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற உள்ளது

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயனின் 23வது படமான ‘மதராசி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்றும், படத்தின் குழுவினர் ஏற்கனவே அண்டை தீவு நாடான இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாகவும் இந்திய மீடியா டிடி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கோடம்பாக்க வட்டாரம் ஒன்று, “சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் பங்கேற்கும் ஒரு தீவிரமான க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கவுள்ளனர். படக்குழு 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளது. இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து, மதராசி போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் நுழையும்” என்று தெரிவித்துள்ளது.

படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

மதராசி படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2024 இல் தொடங்கி சென்னை, புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இதற்கு சுதீப் இளமன் ஒளிப்பதிவு செய்கிறார். மதராசி படத்தில் பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். (DD Next)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula