free website hit counter

சித்ராலயா கோபுவுக்கு மைல்கல் பிறந்த நாள் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி காதலி, தொடங்கி பாட்டி சொல்லை தட்டாதே வரையில் நிறைய நகைச்சுவை படங்களுக்கு திரைக்கதை எழுதி, பல படங்களை இயக்கியிருப்பவர் முதுபெரும் நாடக மற்றும் திரைக் கலைஞர் சித்ராலயா கோபு.

இயக்குநர் ஸ்ரீதரின் பால்ய கால நண்பர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆத்ம நண்பராகவும் விளங்கியவர். நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி என பல பட்டங்கள் பெற்ற சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்.

அவர் இயக்கிய முதல் படம், ஏவிஎம்மின் காசேதான் கடவுளடா. இவர் 1992ல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கலைமாமணி விருதை பெற்றவர். உலக நாயகன் கமல் ஹாசனும், கிரேசி மோகனும் சேர்ந்து இவருக்கு நகைச்சுவை செம்மல் பட்டத்தை வழங்கினார்கள்.
 
யூனிட்டி கிளப்பின் மூலம், பல வெற்றி நாடகங்களை எழுதிய இவர், வாஷிங்டனில் திருமணம் தொடரை அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தி இயக்கினார். 



இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக உலக நாயகன் கமல்ஹாசன், சிவகுமார், வெண்ணிறாடை மூர்த்தி, சித்ரா லக்‌ஷ்மணன் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். சித்ராலயா கோபு தற்பொழுது, தனது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசிக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction