free website hit counter

சீமானின் ‘பகலவன்’ கதையைத் திருடினாரா லிங்குசாமி? வெடிக்கும் புதிய சர்ச்சை !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய் நடிக்க வேண்டும் என்று அவருக்காக சீமான் உருவாக்கிய ஒரு புரட்சி இளைஞனின் கதையே ‘பகலவன்’. சீமானின் தீவிர அரசியல் ஈடுபாட்டைப் பார்த்த விஜய், அந்தப் படத்தில் நடித்தால் தனது சினிமா வாழ்க்கைக்கு சிக்கல் விளையும் என்று கருதி அதிலிருந்து வெளியேறினார்.

அதற்காக வருந்தாத சீமான், பின்னர் அந்தக் கதையை சூர்யாவுக்குச் சொன்னதும் அதில் நடிக்க சூர்யா விரும்பம் தெரிவித்தார். ஆனால், படத்தை சீமானே தயாரிக்க விரும்பியதை சூர்யா விரும்பாததால் சூர்யாவும் தட்டிக் கழித்தார். அடுத்து ஜெயம் ரவி இந்தக் கதையைக் கேட்டு வியந்து கால்ஷீட்டும் கொடுத்திருந்த நிலையில்தான் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படுத்தோல்வி அடைந்தது. இதனால், ‘பகலவன்’ படம் தள்ளிப்போனது.

சீமானும் கட்சி அரசியலில் ஈடுப்பட்டதால் பகலவன் படத்தைத் தொடங்க முடியவில்லை. இந்நிலையிதான் பகலவன் கதையைப்போன்ற ஒன்றை காட்சிகளை மாற்றி திரைக்கதை எழுதி சூர்யாவை நடிக்க வைக்க லுங்குசாமி களமிரங்கினார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் கதைத் திருட்டு புகார் அளித்ததால் சூர்யா பயந்து பின்வாங்கி அந்தப் படத்தில் நடிக்க மறுத்தார்.

இந்நிலையில் கதைத் திருட்டுப் பஞ்சாயத்து பேசப்பட்ட பகலவன் கதையை லிங்குசாமி மீண்டும் படமாக்க முன்வந்துள்ள நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தில் சீமான் லிங்குசாமி மீது புகார் எழுப்பியிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் விசாரணைக்கு வந்த இந்தப் புகாரை ஏற்றுகொள்ள முடியாது என சீமானுக்கு கடுக்கை கொடுத்திருக்கிறது எழுத்தாளர்கள் சங்கம். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்தது என்ன? இந்த கடிதங்கள் உங்களுக்கு அதைச் சொல்லும்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: