நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டில் ஒன்றில் தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ், ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
ஒரு படம் என்று வரும்போது 150 முதல் 200 பேர் வரை பணிபுரியும் நிலையில், அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்கவிடக்கூடாது என்பது போல சில விமர்சனங்கள் இருக்கின்றன என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும் எனவும் படத்துக்கு ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும்ல கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.