இலங்கையின் சிங்களத் திரையுலகின் புகழ்மிகுந்த நடிகையான மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக இன்று 24ந் திகதி காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான மாலினி பொன்சேகாவிற்கு வயது 76.
இலங்கை சிங்கள சினிமாவின் ராணி எனக் கூறப்படும் நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
1947 ஏப்ரல் 30 ல் இலங்கையின் களனி பகுதியில் பிறந்த மாலினி பொன்சேகா, 1963ல் மேடை நாடகத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 1968ல் சினிமாவில் சினிமா நடிகையாக பிரபலமான அவர், 1973 ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.
இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பாக வெளிவந்த தமிழ்திரைப்படமான "பைலட் பிரேம்நாத்" திரைப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஜோடியாக மாலினி பொன்சேகா நடிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.