free website hit counter

விஜய் ஆண்டனியின் "மார்கன்" டிரெய்லர் வெளியீடு

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்கன்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மார்கன் என்று பெரியடப்பட்டுள்ளது.

இந்த படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

www.youtube.com/watch?v=S27THSM8yd4

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula